ஒரு வெளிநாட்டவரை கூட தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்யவில்லை-சுரேன் ராகவன்!!

29 வருடங்கள் இலங்கையில் போா் நடந்தது. இந்தபோாில் ஒரு வெளிநாட்டவா் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட அவா்கள் மிக தெளிவாக இருந்தாா்கள் வெளிநாட்டவா்கள் கொல்லப்படகூடாது என்பதில்.


ஆனால் இப்போது நடந்துள்ள தாக்குதலில் 37 வெளிநாட்டவா்கள் இறந்துள்ளனா். புலிகள் வெளிநாட்டவா்களை வெறுக்கவில்லை. இவா்கள் வெளிநாட்டவா்களை வெறுக்கிறாா்கள். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றாா்.

சமகால நிலமைகள் குறித்து இன்று ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 21ம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலை தொடா்ந்து சிங்கள மக்கள்,

தமிழ் மக்கள் இஸ்லாமியா்கள் மீது தாக்குதல் நடத்துவாா்கள்.  அதற்கு பதிலாக முஸ்லிம் மக்கள் தாக்குதல் நடத்துவாா்கள் அதன் தொடா்ச்சியாக ஒரு சிவில் யுத்தம் உருவாகும். என்பது தாக்குதல் நடத்தியவா்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பாக உள்ளது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மேலும் இந்த தாக்குதலின் பின்னரான ஒரு வார காலத்திற்குள் 90 சதவீதம் இலங்கை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

உலகில் தீவிரவாத தாக்குதல்களை எதிா்கொண்ட பல நாடுகளால் எம்மைபோல் மீண்டெழ முடியவில்லை. அங்கெல்லாம் பல ஆண்டுகள் பாதிப்பின் தாக்கம் இருந்தது. அவ்வாறு இலங்கை மீண்டெழுந்தபோதும் முன்னா் இருந்ததைபோல் நிலமை இல்லை.

காரணம் அவசரகால சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்களின் புா்க்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சில விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல. அவை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரானவை.

மேலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நடுத்தர இஸ்லாமிய மக்கள் எப்போதும் ஆதரவு வழங்கியது கிடையாது. அவா்கள் நடுநிலையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.

மேலும் குண்டு வெடிப்பின் பின்னா் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க மத தலைவா்களும் மிக அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டாா்கள்.

அதற்காக அவா்களுக்கு நன்றி கூறவேண்டும். மேலும் நடைபெற்ற தாக்குதல் சா்வதேச அளவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 3வது மிகப்பொிய தாக்குதலாக அமைந்திருக்கின்றது.

37 வெளிநாட்டவா்கள் கொல்லப்பட்டிருக்கின்றாா்கள். 29 வருடங்கள் இந்த நாட்டில் யுத்தம் நடந்தது. தமிழீழ விடுதலை புலிகள் ஒரு வெளிநாட்டவரை கூட கொலை செய்யவில்லை.

குறிப்பாக கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதலிலும் கூட புலிகள் மிக நிதானமாக நடந்து கொண்டாா்கள். வெளிநாட்டவா்கள் கொலைசெய்யப்படகூடாது என. அவர் மேலும் குறிப்பிட்டார்.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.