முள்ளிவாய்க்கால் பேரவலம்.பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம்.!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரமானது 11.05.2019 அன்று பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது.
தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அடையாள உண்ணாவிரதம், எழுச்சிஉரை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்புத் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றன நடைபெற்று வருகின்றன,நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று (13.05.2019 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வழமைபோல் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை இளையதம்பி தெய்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதன் பின் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான டென்சிகா, சுஜீவன், பாலகிருஷ்ணன், நிரோச்குமார் ஆகியோரால் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.எமது போராட்டத்தின் வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.


என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைவில் நிறுத்தி இந்த முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்திலும் 18.05.2019 மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நினைவெழுச்சிப் பேரணியிலும் கலந்துகொண்டு தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம். என்னும் செய்தியினை மக்களுக்கு கூறிக்கொண்டு மாலை 6 மணிக்கு அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு ரகு அப்பா அவர்கள் தமிழீழ உணர்வாளர்களான டென்சிகா, சுஜீவன், பாலகிருஷ்ணன், நிரோச்குமார் ஆகியோருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து திரு வசந்தன் அவர்கள் உறுதிமொழி எடுக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.