பிரித்தானியாவில் 6ஆம் நாளாகத் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

இன்று 16.05.2019 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரத்தின் 6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது. வழமைபோல் காலை10 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடரினை திரு தெய்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான சுஜீவன், பிரதீபன், பாலகிருஷ்ணன்,சண்முகநாதன், பாலகுமரன், வெற்றிக்குமரன், அருளிசா ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் எழுச்சி உரையினைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திரு வடிவேலு சுரேன் அவர்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கி அடையாள உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததுடன், திரு உதயனன் அவர்கள் நமது அடையாளமான தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும் அதன் கீழ் ஒன்றுபடவேண்டிய தேவையையும் உணர்த்தி உறுதிமொழி எடுத்ததைத் தொடர்ந்து  இன்றைய எழுச்சி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
Powered by Blogger.