வாழைச்சேனையில் தேடுதலில் ஆயுதங்கள் மீட்பு!!(படங்கள்)

வாழைச்சேனை- மீராவோடை மற்றும் கும்புறுமுனை பகுதிகளில் டம்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் ாி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருக்கின்றது.


இதன் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் கிராமங்கள் தோறும் தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

இதன்போது நேற்று புதன்கிழமை மாலை மீராவோடை கிராமத்திலும் கும்புருமுனை பிரதேசத்திலும் தேடுதல் நடத்திய போது கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சிலவற்றைக்

குறித்த இரண்டு கிராமங்களிலும் கண்டெடுக்கப்பட்டள்ளளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மீராவோடை பிரதேசத்திலுள்ள நீரோடைக்கு அருகில் பிளாஸ்டிக் குழாயில் மறைத்து வைத்திருந்த நிலையில் ரீ.56ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 

கும்புறுமுனை முந்திரியம் தோட்டபகுதயில் ரீ.56ரக துப்பாக்கி இரண்டும், கைத்துப்பாக்கி ஒன்று, டெட்டனேட்டர்கள் ஒன்பது (09),

ஜெலிக்நைட் நான்கு (04) ரீ.56ரக துப்பாக்கி ரவைகள் என்பத்திரெண்டு (82), ரிவோல்வருக்கான ரவைகள் இருபத்துநான்கு (24), ரீ.56ரக மெகசின் இரண்டு (02) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக

பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த ஆயுதங்களுடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இவர்கள் தொடர்பான விசாரணைகளை 

வாழைச்சேனை பொலிஸார் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.