வவுனியாவில் பல்கலைக்கழக வவுனியா வளாகம்,மாணவர் விடுதி அதிரடிப்படையினர் கடும் சோதனை!!


வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் மற்றும் மாணவர் விடுதி உட்பட கற்கை நிலையங்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரினால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தின் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியிலிருந்து 11 மணிவரை வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகம் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. எதிர்வரும் 6ஆம் திகதி நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கமைய பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் முப்படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.