அஜித்தின் விஸ்வாசம்: நம்பர்1

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூல் சாதனை படைத்தது.

தந்தை மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு மதுரைப் பின்னணியில் உருவான இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுப்பது குறைந்துவிட்டது எனும் பேச்சு பரவலாக எழுகிறது. ஆனால் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது. அதை விஸ்வாசம் திரைப்படம் நிரூபித்துக்காட்டியது.
திரையரங்கில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பு செய்யப்படும் போதும் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அந்தவகையில் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தின சிறப்பு திரைப்படமாக அஜித்தின் பிறந்தநாளில் சன் டிவி மாலை 6 மணிக்கு விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பியது.
தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை ஒளிபரப்பப்பட்ட அத்தனை படங்களையும் பின்னுக்குத் தள்ளி விஸ்வாசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கோடியே 81 லட்சத்துக்கும் அதிகமான இணைப்புகளில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.
டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் படங்களின் பட்டியல்!
விஸ்வாசம் - 1,81,43,000
பிச்சைக்காரன் - 17696000
பாகுபலி 2 - 17070000
சர்கார் - 16906000
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.