சொந்த வீடு, சொர்க்கம் போல வாழ்க்கை!! நெகிழும் கொட்டாச்சி!!

மைக்கா நொடிகள்' படத்தின்மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுட்டி நாயகி, 'மானஸ்வி'. இவர், நடிகர் கொட்டாச்சியின் மகள். சென்னையில் சொந்த வீடு வாங்கியே ஆக வேண்டும் என்கிற கனவை நினைவாக்கியிருக்கிறார்கள் மானஸ்வியின் குடும்பத்தினர். 
பதினெட்டாம் தேதி பால் காய்ச்சினோம். மே 1 -ம் தேதி புது வீட்டுக்குக் குடி வந்துட்டோம். கிட்டத்தட்ட பதினைந்து வருடக் கனவு இது!
சென்னை வந்த புதுசுல மேன்ஷன்ல என் வாழ்க்கை ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் 800 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து இருந்தேன். கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய் வாடகைக்கு வீடு பார்த்தேன். என்னுடைய திருமணத்துக்குப் பிறகு நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிச்சது. திருமணமாகி 7,000 ரூபாய் வாடகைக்குக் குடியேறினோம். ஆனா, அவ்வளவு ரூபாய் கொடுத்து வாடகைக்கு போகிறோமேன்னு வருத்தமா இருக்கும். ஒவ்வொரு தடவை வாடகை கொடுக்கும்போதும், அடுத்த முறை கண்டிப்பா நாம வீடு வாங்குறோம் என்கிற எண்ணம் வந்துட்டே இருக்கும். இப்போ வாங்கணும், அப்போ வாங்கணும்னு பல தடவை நினைச்சிருக்கேன். என் பொண்ணு மானஸ்வி பிறந்ததுக்கு அப்புறம், எங்க லைஃப்ல பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய நடக்க ஆரம்பிச்சிருக்கு. பாப்பா பிறந்து இரண்டு வயசுல 15,000 ரூபாய் வாடகைக்குப் போனோம். மூணு வயசுல மானஸ்வி நடிக்க ஆரம்பிச்சிட்டா.  அப்படியே வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைந்தது. இப்போ அவளுக்கு ஆறு வயசு. நாங்க ஆசைப்பட்ட சொந்த வீட்டை இப்போ வாங்கிட்டோம். 
கொட்டாச்சி
இதுக்கு, முழுக்க முழுக்க என் மனைவி அஞ்சலிதான் காரணம். ஆரம்பத்திலிருந்தே வாடகை வீடு அவங்களுக்குப் பிடிக்கலை. அவங்க டப்பிங் பேச ஆரம்பிச்சதும், கண்டிப்பா நாம வீடு வாங்குறோம்னு ரொம்ப முயற்சி எடுத்தாங்க. என் வீட்டிலுள்ள இரண்டு தேவதைகளால் மட்டும்தான் இது சாத்தியமாச்சு'' என்று புன்னகைக்கிறார், கொட்டாச்சி.
Powered by Blogger.