கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது மோடி! - ராகுல்காந்தி !!

அன்பும், அரவணைப்பும்’ இப்படித்தான் முடிகிறது ராகுல்காந்தியின் ட்வீட். குற்றச்சாட்டுக்கான பதில் என்றபோதும் அவர் தனது ட்விட்டில் இதையும் சேர்த்து தான் எழுதியிருக்கிறார்’

`உங்கள் தந்தை ராஜீவ்காந்தி ஊழலில் நம்பர் ஒன்னாக மாறியிருந்தார்” என்று காங்கிரஸை கடுமையாக சாடியிருந்தார் மோடி. அதற்கு ராகுல் தனது ட்விட்டர் பக்கதில் பதிலளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ராகுலை குறிவைத்து, `உங்கள் தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர், மிஸ்டர் க்ளின் என்று கூறுவார்கள். ஆனால் அவர் வாழ்வு முடியும் போது, `ஊழலில் நம்பர் ஒன்னாகவே’ அவர் மாறியிருந்தார்.  என் மதிப்பை குறைக்கும் வகையில் ராகுல்காந்தி, ஆதாராமின்றி ரஃபேல் விவகாரத்தில் என்னைக் குற்றம்சாட்டுகிறார். எனது செல்வாக்கை சிதைத்து என்னை,சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற பலவீனமான அரசு அமையவேண்டும் எனக் கருதுகிறார்கள்” என்றார்.

மேலும், ` இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிறக்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை’ என்று ராகுலை ஒப்பிட்டுப் பேசினார். இந்நிலையில் மோடியின் இந்த பேச்சுக்கு ராகுல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில், `ஆட்டம் முடிந்துவிட்டது. கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. உங்களைப்பற்றி உங்கள் எண்ணங்களை, என் தந்தை மீது பரப்புவது, ஒருபோதும் உங்களுக்கு பாதுகாப்பாக அமையாது. என் அன்பும், அரவணைப்பும்” என்று பதிவிட்டுள்ளார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.