ரெய்னா கேள்வியும் நடிகர் சூர்யாவின் பதிலும்!!

செல்வராகவன் - சூர்யா காம்போ இணைந்திருக்கும் படம் என்.ஜி.கே. மே 31-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இன்று (20.5.19) 5 மணிக்கு ட்விட்டர் லைவ்வில் வந்த சூர்யா, ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ஏன் `என்.ஜி.கே' படத்துல நடிச்சீங்க?'' என்ற கேள்விக்கு சூர்யா சொன்ன பதில் இது!. ``என்.ஜி.கே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் புராஜெக்ட். 2000-லே செல்வராகவன்கூட வொர்க் பண்ண வேண்டியது. ஆனா, கிட்டதட்ட 18 வருடங்களுக்குப் பிறகு அவர்கூட சேர்ந்திருக்கேன். ரெண்டு பேரும் மீட் பண்ணும்போது அவர்கிட்ட மூணு ஸ்க்ரிப்ட் இருந்தது. `டீரீம் வாரியர்ஸ்' பிரபுவும் கூட இருந்தார்.

அப்போ, `என்.ஜி.கே' ஸ்க்ரிப்ட் எடுத்துக்கலாம்னு நாங்க முடிவு பண்ணோம். `நந்த கோபாலன் குமரன்' பற்றிதான் செல்வராகவன் எப்போதும் பேசிட்டிருப்பார். எனக்கே ரிங்டோன் மாதிரி ஆகிடுச்சு. என்னுடைய சினிமா கரியர்ல ஒரு திருப்புமுனையா இந்தப் படம் இருக்கும். உண்மையாவே, இந்தப் படம் பண்றப்போ நிறைய விஷயங்களை அவர்கிட்ட கத்துக்கிட்டேன்.

உதாரணத்துக்குப் படத்துல எனக்கு என்ன ஆச்சுனு தெரியாம ஊர் மக்கள்லாம் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க. இது ஃபுல் நைட்டும் போகும். இதுக்கு என்ன மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தணும்னு ஒரு சினிமா நடிகனா எனக்குத் தெரியும். ஆனா, இந்தக் காட்சியை எடுக்கும்போது செல்வா சார், ஒரு பாடி லாங்குவேஜ் சொல்லிக் கொடுத்தார். இதையெல்லாம் பாக்கிறப்போ எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அவர்கிட்ட நிறைய லேயர்ஸ் இருக்கு. அவர் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் நம்ம பண்ணியிருக்கவே மாட்டோம். நேர்மையா சொல்லணும்னா, செல்வராகவன் படம் மாதிரி இந்தப் படம் இருக்குனு யாரும் அவருடைய படத்தோட கம்பேர் பண்ண முடியாத அளவுக்கு இருக்கு. இதுக்குக் காரணம் அவருடைய உழைப்பு. அதுனாலதான் இந்தப் படத்தைப் பண்ண நினைச்சோம்" என பதிலளித்தார்.

அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி இது. ``சி.எஸ்.கே. அணியில் உங்களுக்குப் பிடித்த வீரர் யார்?' அதற்கு, ``ஹாய் மாப்ளை. ரெய்னாவை மாப்ளைனுதான் கூப்பிடுவேன். எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. நான் சொல்லும் பதிலை நீங்களே ஏத்துக்குவீங்க. மகேந்திர சிங் தோனியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் . நடந்து முடிந்த சி.எஸ்.கே மேட்சை ரசிச்சுப் பார்த்தேன். நான் எப்போதும் சி.எஸ்.கே. ரசிகன்!'' என்று பதிலளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.