உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து பிரட் லீன் கருத்துகள் என்ன??

கிரிக்கெட் இரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னமும் 20 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.

12ஆவது அத்தியாயமாக நடைபெறவுள்ள இத்தொடர் இம்முறை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.


இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.


இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், இத்தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இத்தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவுஸ்ரேலியா சிறந்த அணி. உலகக் கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலியா அணியில் இருந்து ஜெய் ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியுள்ளார். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு அணியாக இருந்தாலும், மிகவும் தயாரான நிலையில்தான் உலகக் கிண்ண தொடருக்குச் செல்லும்.


ஆனால் இதுவெல்லாம் அவர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.
தொடர் இங்கிலாந்தில் எந்த மாதம் நடைபெறுகிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.


ஏராளமானோர் இங்கிலாந்து ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. புதுப்பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், பந்து பொலிவைஇழந்துவிட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டும்’ என கூறினார்.


பிரட் லீ இதுவரை 221 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 380 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு, பிரட் லீ 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அவுஸ்ரேலியா அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.


இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.