கனடா திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்‘ !!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடா திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.


கடந்த மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் கனடாவில் உள்ள மொண்ட்ரியால் நகரில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தற்போது தேர்வாகிவுள்ளது.

ஆபாசகாட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

இத்திரைப்டத்தில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் நடிகர் விஜய் சேதுபதி பேசும் வசனம்  விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததுடன் திருநங்கைகளை அவமதிக்கும் காட்சியில் நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் இந்த படம் விரைவில் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு தற்போது நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.