கன்னியா ஆலயங்களை உடைப்பதில் ஆர்வம் காட்டிய துறவி! ஆய்வாளர் திருமலை நவம்!!

திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றை ஆதாரப்படுத்துகின்ற கன்னியா ஆலயங்கள் மற்றும் அடையாளங்களை தொடர்ச்சியாக அழிப்பதில் மூர்க்கமாக இருந்து வந்தவர் திருகோணமலை வில்கம் விகாரை பௌத்த ஆலயத்தின் துறவியாகும் என ஆய்வாளர் திருமலை நவம் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை தென்கைலை ஆதினத்தில் நேற்று நடைபெற்ற கன்னியா தொடர்பான ஆய்வரங்கில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
இங்கு மூன்று ஆலயங்கள் இருந்துள்ளது. சிவன்ஆலயம், பிள்ளையார்ஆலயம், முருகன் ஆலயம் போன்றனவாகும். இவை யுத்தக் காலத்தில் புல்டோசர்போட்டு உடைக்கப்பட்டுள்ளன.
கன்னியாவும் ஆலயங்களும் தமிழர்களின் பூர்வீகமானவை என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. அவை என்னிடமும் உள்ளன. இவற்றை தொல்பொருள் திணைக்களமும் பௌத்த துறவியும் கபளீகரம் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைளும் காலத்திற்கு காலம் நடைபெற்று வந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 2004ஆம் ஆண்டு இங்கிருந்த பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்ட போது அதனை குறித்த பிக்கு தடுத்து உப்புவெளிப் பொலிஸில் முறையிட்டிருந்தார்.
அடுத்து சிலதினங்களிலே வழங்கு போடப்பட்டது சட்டத்தரணி சிவபாலன் மூலம் நீதிமன்றில் வழக்கு வாதிடப்பட்டு வந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டு, அது எமக்குச் சார்பாக முடிவுக்கு வந்திருந்தது.
இதற்கான ஆவணங்கள் அதிகாரங்கள் போர்த்துகேயர்காலத்தில் பிரதேச சபைக்கும் காணி உரிமையாளருக்கும் வழங்கப்பட்டிருப்பது இங்கு மிக முக்கியமான விடயமாகும்.
இவ்வாறான பல ஆதாரங்கள் உள்ள நிலையில் தொடர்ந்தும் கபளீகரம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது கண்ணடிக்கதக்கதாகும். எனவே இதனைப்பாதுகாக்க நாம் திட்டமிட்ட அடிப்படையில் செயலாற்ற வேண்டும்.
கன்னியாவில் மேற்கொள்ளப்படுவது தமிழ் மக்களுக்கெதிரான பண்பாட்டு கலாச்சாரப் படுகொலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் கன்னியா சிவன் ஆலய நிர்வாகத்தினர், பல்வேறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது ஆர்வலர்கள் என அதிகளவிலானோர் கலந்து கொண்டு தமது ஆதங்கத்தை தெரிவித்ததுடன், ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.