கேரளாவில் ஒரு `பொள்ளாச்சி' சம்பவம்!

பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் தமிழகம் இருந்து வருகிறது. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சி சம்பவம் போல் கேரளாவிலும் பாலியல் வன்முறைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பொள்ளாச்சியைப் போல் கூட்டுப் பாலியல் வன்முறை இல்லாமல் ஒரே ஒரு நபர் மட்டும் 50 பெண்களை சீரழித்த அதிர்ச்சிகரமான வெளிவந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள அரீபறம்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ் குமார் என்ற ஹரி. எம்பிஏ பட்டதாரியான இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு இளம்பெண் புகார் சொல்கிறார். ``கடந்த இரண்டு வருடமாகப் போட்டோ மார்பிங், பேஸ்புக் மெசேஜ்களை வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகிறார்'' எனப் புகார் கொடுக்கிறார்.

ஏதோ சிறிய பிரச்னை என்று தான் முதலில் பிரதீஷை விசாரிக்க அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோதும் அனைத்தும் அதிர்ச்சி ரகமாகவே இருந்துள்ளது. பிரதீஷின் வாக்குமூலம் குறித்து எட்டுமானூர் காவல்துறை அதிகாரி மஞ்சுலால் கூறுகையில், ``பாலியல் மிரட்டல் விடுப்பதாக பிரதீஷ் மீது பெண் ஒருவர் புகார் கூறினார். அந்தப் புகாரில் விசாரணை நடத்திய போது தான் எங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது. பிரதீஷ் ஒரு பெண்ணை இப்படி மிரட்டவில்லை. எங்களுக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை தற்போது வரை 50 பெண்களுக்கு இப்படி பாலியல் மிரட்டல் விடுத்திருக்கிறான்.

இவனின் இலக்கே பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்கி வரும் குடும்பத்தலைவிகள் தான். அவர்களிடம் வலைதளங்களில் நட்பாகப் பேச ஆரம்பித்து அவர்களிடம் நைசாக பேசி அவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வந்து அவர்களின் மொபைல் எண்ணையும் வாங்கிவிடுவார். வெறும் மொபைல் எண்ணை வாங்கியதோடு மட்டுமில்லாமல் அவர்களைத் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்த பிரதீஷ் செய்தது வேறு ஒரு காரியம். பெண்களிடம் மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்ப விவரங்களையும் முழுவதுமாக பெற்றுக்கொள்வார். அந்தப் பெண்களின் கணவர்களுக்கு பேக் ஐடி மூலம் காதல் வலை விரிக்கும் அளவுக்குப் பேசி அதையே ஸ்க்ரீன் ஷாட் சம்பந்தப்பட்ட மனைவிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவார்.

அவர்களிடையே ஏற்படும் பிரிவை பயன்படுத்தி பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பின்னர் அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்கிறார். வீடியோ கால் பேசும் போது அதனை ரெக்கார்ட் செய்து, பின்னர் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசப்படத்துடன் வைத்து மார்பிங் செய்து அதனை அந்த பெண்களுக்கு அனுப்பி, தனது விருப்பத்துக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அவனின் ஆசைக்கு இணங்கப் பெண்கள் மறுத்தால் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன், கணவருக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறி மிரட்டவும் செய்துள்ளார். பிரதீஷின் மிரட்டலுக்குப் பயந்து பல பெண்கள் வேறு வழியில்லாமல் இவன் சொல்வதை கேட்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இப்படி 58 பெண்களின் வாழ்க்கையை இதுவரை சீரழித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மார்பிங் செய்த பெண்களின் புகைப்படங்கள் உள்ள அவனது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளான். 2021ம் ஆண்டுக்குள் 100 பெண்களை அடைய வேண்டும் என்பதே அவனது இலக்காகக் கொண்டு இப்படிச் செய்துள்ளான். இந்த நேரத்தில் இளம்பெண் தைரியமாக புகார் கொடுத்ததால் மாட்டிக்கொண்டுள்ளான்" என போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பிரதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.