அரசியல் முக்கியஸ்தர்கள் கண்டிக்கு விரைவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் மூன்றாவது நாளாக இன்று தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அவரை சந்திப்பதற்காக பல அரசியல் முக்கியஸ்தர்கள் கண்டி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


கண்டி தளதா மாளிகைக்கு முன்பாக கடந்த 31ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை அதுரலியே ரத்தன தேரர் ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு போராட்டத்தையடுத்து அதுரலியே ரதன தேரரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதால், அவர் நீர் மாத்திரம் அருந்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் தேரரை சந்திப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, மகிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர ஆகியோர் கண்டிக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம் காரணமாக அதுரலியே ரத்தன தேரரின் உடல்நிலை தினம்தினம் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடைய போராட்டத்திற்கு நாட்டில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆதரவுகள் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய கோரி, தேரர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இல்லை என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரதன தேரர் ஜனாதிபதியை சந்தித்து முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர் செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்கு தலையிடும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் திரப்பன கிராமத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் உள்ளிட்ட மூவர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன சென்று பார்வையிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.