"முகிலன் எங்கே? "தமிழ அரசிற்கு எதிராக போராட்டம்!!
‘சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்த முகிலன், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?’ என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன் காணாமல் போயுள்ளார். அவர் குறித்த எந்ததொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இவ்விடயம் குறித்து பல்வேறு அமைப்புகள் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளதுடன் சமூக இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அரசும் இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பொலிஸாரும் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகையால் முகிலனை தேடி தரும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை