வடக்கில் மரம் நடுகை திட்டம்!!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கில் மரம் நடுகை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வடக்கில் 1000 மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தின் ஒரு பிரிவாக வவுனியாவில் இன்று (புதன்கிழமை) 250 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வனவளத்திணைக்களம், விவசாய திணைக்களம் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலளார் கா.உதயராசா, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன குமார, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவத்தின் 56 படைப்பிரிவு அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இந்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள்சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.