லண்டனில் அமைய உள்ள உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்!!

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, சாகசங்களும் வித்தியாசமான முயற்சிகளும் மிகவும் பிடிக்கும். அப்படி முற்றிலும் வித்தியாசமான ஒரு புகைப்படம்தான், நெட்டிசன்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


லண்டனில் உள்ள புகழ்பெற்ற கட்டடங்களில் இன்ஃபினிட்டி கட்டடமும் ஒன்று. மொத்தம் 55 மாடிகளைக்கொண்ட அந்தக் கட்டடத்தின் மொட்டைமாடியில், 360 டிகிரி கொண்ட உலகின் முதல் நீச்சல் குளத்தை கட்ட முடிவெடுத்து, அதற்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு பொறியாளர்கள்.

மொட்டைமாடியில் 200 மீட்டர் உயரம் வரை வெறும் கண்ணாடிகளால் சூழப்பட்டுள்ளது அந்த நீச்சல் குளம். அதில் 6,00,000 லிட்டர் அக்ரலிக் (acrylic ) தண்ணீர் நிரப்பப்படுமாம். அதில் நீந்துபவர், தண்ணீருக்கு அடியில் இருந்து வெளியேயும், வெளியிலிருந்து தண்ணீருக்கு அடியிலும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியுமாம். காலை நேரங்களில், நீச்சல் குளத்தில் உள்ள நீர் மிகுந்த தெளிவாகவும் இரவு நேரங்களில், அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு ஒளியில் பிரகாசமாகவும் காணப்படும்.

இந்த நீச்சல் குளத்தின் அடிப்பகுதியும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டடத்துக்குள் வரும் மக்கள், மேலே நீச்சல் குளத்தில் உள்ளவர்களைப் பார்க்கலாம். இந்த நீச்சல் குளம் 2020-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால், அந்த நீச்சல் குளத்துக்கு செல்வதற்கான படிகள், மாதிரி புகைப்படத்தில் இல்லை. அதனால், உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள், படி எங்கையா? என்ற டோனில் சமூக வலைதளங்களைக் கேள்விகளால் நிரப்பி வருகின்றனர். தற்போது, இந்த நீச்சல் குளத்தின் மாதிரி புகைப்படம் வைரலாகிவருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.