அமெரிக்காவில் விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.


அமெரிக்காவின் Massachusetts அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.