இந்திய விமானம் பற்றி தகவல் வழங்குவோர்க்கு சன்மானம்: விமானப்படை!!

மாயமான இந்திய விமானம் பற்றிய தகவல் வழங்குவோருக்கு 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படுமென விமானப்படை அறிவித்துள்ளது.


விமானத்தை தேடும் பணிகளை 7ஆவது நாளாக விமானப்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ள  போதும், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாயமான விமானம்  குறித்து தகவல்களை  வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படுமென இந்திய விமான படையின் எயார் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் தகவல்களை 9436499477, 9402077267, 9402132477 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அளிக்கலாமென விமான படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அசாம் மாநிலம்- ஜோர்கத் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போயுள்ளது.

இந்நிலையில் காணாமல்போன விமானம் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இராணுவம் மற்றும் இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினரும் தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்து, அதனுடைய  ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் ஊடாக விமானத்தை தேடும் பணி  முன்னெடுக்கப்பட்டது.

ஆனாலும் தேடுதல் பணியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாதமையினால், விமான ஆராய்ச்சி மையத்தின் 5000 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் NTRO உளவு செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.