தீவிரவாதிகளுடன் ஹிஷ்புல்லா உற்று உறவாடியது அம்பலம்!!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய தேசிய தௌஹீத் யமாத் அமைப்புடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லா உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தாா். என முன்னாள் மேல் மாகாண ஆளுநா் அசாத் சாலி சாட்சியமளித்துள்ளாா்.


மேலும் அவர் குறிப்பிடுகையில்.

சஹ்ரான் ஆயுதக்குழுவாக செயற்பட்டு கிழக்கில் மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் அச்சமடைந்த மக்கள், அவருக்கு கட்டுப்பட்டு, அவரது பேச்சை கேட்டனர்.

2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தம்முடன் உடன்படிக்கை மேற்கொள்ளும் கட்சிகளிற்கே உதவி செய்வதாக சஹ்ரான் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானுடனும் உடன்படிக்கை செய்தார்.

ஹிஸ்புல்லாஹ் மட்டுமல்ல மேலும் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

தமது தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு கொளுத்தக்கூடாது, பாடல் ஒலிபரப்பக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த உடன்படிக்கையில் இருந்தன.

அப்துல் ராசிக் கைது செய்யப்படாமல் வெளியில் நடமாடுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. அவர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை பின்பற்றுபவர்.

இது குறித்து ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் குறிப்பிட்டுள்ளேன். ஜனாதிபதி குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இது குறித்து கலந்துரையாடினார் என தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை எடுத்துக்கொண்டால், 2005 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன்தான் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவேதான் வேலை செய்துள்ளன. இதனை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

இதனால், முஸ்லிம் ஒருவருக்கு முறைப்பாடளிக்கக்கூட முடியாத நிலைமை காணப்பட்டது.

சிலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கெதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றில் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தேன்.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.” என மேலும் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.