புற்றுநோய்க்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் - தலையில் நாடாப்புளு!!

சில வருடங்களுக்கு முன் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திரைப்படம், சைத்தான்.
அதில், கதாநாயகனுக்கு எங்கிருந்தோ குரல்கள் கேட்கும். கண்முன் போலியான காட்சிகள் தென்படும். இதேபோன்று அவதிப்பட்ட அமெரிக்க பெண் ஒருவருக்கு, தலையிலிருந்து நாடாப்புழு ஒன்றை நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அறுவைசிகிச்சை முடியும்வரை மருத்துவக் குழுவினர், அது புற்றுநோய்க் கட்டி என்றே நம்பி சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர், பால்மா. 42 வயதாகும் இவர், நீண்ட நாள்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டுவந்தார். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பார். எப்போதாவதுதான் தூக்கம் வரும். அப்படியே தூக்கம் வந்தாலும் கொடுமையான கனவு வந்து தூக்கத்தைக் கெடுத்துவிடும். விழித்திருக்கும் தருணங்களில் அவருக்கு எங்கிருந்தோ குரல்கள் கேட்கும். போலியான சில காட்சிகள் அவருக்குத் தெரிந்துகொண்டிருந்தன. இந்தப் பிரச்னைகளால் அவருக்கு கை நடுக்கம் ஏற்பட்டது. தேனீர்க் கோப்பையை எடுத்தாலும் கவனக் குறைவால் கீழே போட்டுவிடுவார். எழுதுவது, போன் பேசுவது என்று எதையும் சரியாகச் செய்யமுடியாமல், தொடர்ச்சியாக அவதிப்பட்டுவந்தார்.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாக, ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பால்மா. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இடதுபக்க மூளையில் புற்றுநோய்க் கட்டி இருப்பதாகக் கூறி, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்கள் மருத்துவர்கள். அவை பலனளிக்காத நிலையில், அறுவைசிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக அந்தப் புற்றுநோய்க் கட்டியை நீக்கினார்கள். அந்தக் கட்டியை நுண்ணோக்கியில் ஆய்வு செய்தபோதுதான், ‘அது, புற்றுநோய்க் கட்டி அல்ல; வளர்ந்துவரும் நாடாப்புழு ஒட்டுண்ணி’ என்பது  தெரியவந்தது.

பால்மாவுக்கு சிகிச்சை செய்த நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான ஜொனாதன் ரசௌலி, “மண்டையோட்டுக்குள் அந்தக் கட்டியைப் பார்த்தபோது, நாங்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தோம். அது என்னவாக இருக்கும் என்று தெரியாமல் தவித்தோம். ஆனால், இப்போது அது என்னவென்று தெரிந்துவிட்டது. பால்மாவுக்கு ஏற்பட்ட பிரச்னை அனைத்துக்கும் காரணம் இந்த நாடாப்புழுதான். இனி, அவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.

அறுவைசிகிச்சை முடிந்தபிறகு, “இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இனி என்னால் நிம்மதியாக உறங்க முடியும். தூங்கும்போது, இனி எனக்கு கொடூரமான கனவுகள் ஏற்படாது. ஒருவழியாக அது முடிவுக்கு வந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.