இராணுவ புரட்சிக்கு முயன்ற தளபதிக்கு வடகொரியாவில் மரணதண்டனை!!

வடகொரியாவில் ராணுவ புரட்சியை மேற்கொள்ள முயன்ற ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழமையான மரண தண்டனை முறைகளை விட மிகவும் கொடூரமாக வெட்டுப்பற்களைக் கொண்ட பிரானா மீன்களுக்கு அவர் இரையாக்கப்பட்டார்.


வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வருவதாக சர்வதேச அரசியலில் கருத்துக்கள் நிலவுகின்ற தருணத்தில் அவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அத்துடன், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக் கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜோங் உன், இதுவரை தனது அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த 16 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.

தனது உரையின் போது பலமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமனாரையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார்.

வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதுவர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜோங் உன், மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார்.

அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான 2-வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த விரக்தியில் அந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதுவர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகவும், அவர்கள் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ராணுவ தளபதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில். பியோங்யாங்கில் உள்ள தனது வீட்டில் கிம் ஜோங் உன் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அந்த ராணுவ தளபதி தூக்கி வீசப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ராணுவ தளபதியின் கைகள் மற்றும் உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சிந்த அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம் ஜோங் உன்.

பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை என்பதுடன் அவை இரும்பு போன்ற கடின பற்களை கொண்டிருக்கும். அவை இரும்பு தகடுகளையே கடித்து தூளாக்கி விடும் வல்லமையை கொண்டுள்ளன. மாமிச விரும்பிகளான பிரானா மீன்கள் தமது வலுவான பற்களை கொண்டு சில வினாடிகளிலேயே மனிதர்களை உருத்தெரியாமல் சிதைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரண தண்டனை குறித்த தகவலை வௌிப்படுத்திய இங்கிலாந்து உளவுத்துறையினர் ‘ஜேம்ஸ்பொண்ட்’ திரைப்படத்தின் பாணியில் கிம் ஜோங் உன் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 1965-ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவிஸ்’ என்ற ஜேம்ஸ்பொண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன. இதை பார்த்து தான், கிம் ஜோங் உன் ராணுவ தளபதிக்கு இப்படி கொடூரமான மரண தண்டனை வழங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.