இக்கட்டான நேரத்தில் கூடுகிறது அ.தி.மு.க. நிர்வாகம்!!

அ.தி.மு.க.வுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகின்றது.


அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) டைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள், கட்சித் தலைமை குறித்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள், உள்ளாட்சித் தேர்தல்கள் என பல முக்கிய விடயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Blogger இயக்குவது.