கடும் வறட்சியில் மன்னார்!! பயிர்ச்செய்கையாளர் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காணப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட வறட்சி காரணமாக மன்னார், மடு, மாந்தை, முசலி, நானாட்டான், ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல குளங்கள் மற்றும் நீர்நிலைகளும் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.

இதனால், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.