சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகவும் பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும் இதுவரை காலமும் அவருக்கெதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.