நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்!!
செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய ஆலயப் பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனிடையே, அனுமதியற்ற முறையில் நடப்பட்ட விகாரை பெயர்ப் பலகை மற்றும் பிள்ளையார் ஆலய பெயர்ப் பலகை ஆகியன வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில் விகாரை பெயர்ப் பலகை அகற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், பிள்ளையார் ஆலயச் சுழலுக்கு உரிமை கோரியும் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை