தொண்டு ஆசிரியரும் தொண்டு அரசியல்வாதிகளும்.!!

14.06.2019அன்று யாழ் வந்த தேரரின் காலில் விழுந்து தாம் தொண்டராசிரியர் என்றும் தமக்கு தொண்டராசிரியர் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கதறும் அவல நிலை உங்கள் மனங்களில் எத்தகைய உணர்வலைகளை ஏற்படுத்துகின்றது

இந்த மானங்கெட்ட பிழைப்புத் தேவைதானா

1990காலப்பகுதியிலிருந்து தொண்டராசிரியர் அரசியலொன்று ஈழத்தில்நிகழ்ந்த வண்ணமேயுள்ளது
இதனால் தமிழ்ச்சமூகம் கோமாளிச் சமூகமாய்ப் போகிறது

இன்னொருதரின் கால்களில்நடுவீதியில் விழும் ஒரு கோமாளி நிலையை உடையவர்களிடம் கற்கும் ஒரு பிள்ளை நாளை எப்படி ஒரு தலை நிமிர்ந்த ஆளுமையாளராய்த் தோன்றும்

இத்தகைய தொண்டராசிரியர் நியமன அரசியலால் இன ரீதியான தமிழ்ச் சமூக அழிவிற்கு குறித்த சில தமிழ் அரசியல் வாதிகளும் துணை நிற்பது எப்படி என்றால் அவர்களும் தொண்டராசியர் நியமனம் போல் தொண்டரரசியல் வாதி நியாமனம் பெற்றமையேயாகும்

இத்தகைய ஆளுமையற்ற அரசியல் வாதிகளினதும் ஆசிரியர்களினம் அறியாமையில் கிடந்ந்து அழுந்தும் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து கொடுப்புக்குள் புன்னகைக்கின்றது சிங்களதேசம்

ஒரு காலத்தில் உடம்பில் குண்டைக் கட்டி வந்தவர்கள் இன்று உடம்பைக் காட்டித் தரையில் மன்னிக்கவும் காலில் விழுகிறார்களே என

இத்தனைக்குள்ளும் ஒரு சில தொண்டராசிரியர்களின் பணிபோற்றப்படவேண்டியதாக உள்ளதை மறுக்க முடியாது.

-த.செல்வா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.