குளிக்கச்சென்ற மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
தலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தலைமன்னார் மேற்கு பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் அஜய் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பின்னர் தலைமன்னார் மேற்கு கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த படகை தொட்டுவிட்டு வருகின்றேன் என கூறிச்சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீந்திச் சென்ற தமது நண்பன் காணாமல் போனதைத் தொடர்ந்து குறித்த நண்பர்கள் கிராமத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்து மீனவர்கள் காணாமல் போன மாணவனை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை