மக்கள்தொகை-சீனாவை முந்தும் இந்தியா:-ஐநா!
சீனாவின் மக்கள் தொகையை எட்டு ஆண்டுகளில் இந்தியா முந்தவுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இன்னும் எட்டு ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐநா தெரிவித்துள்ளது. நேற்று (ஜூன் 18) ஐநா வெளியிட்ட அறிக்கையில், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும் எனவும், இந்நூற்றாண்டின் இறுதிவரையில் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக இருந்ததாகவும், சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாக இருந்ததாகவும், 2027ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 770 கோடியாக இருந்ததாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் 200 கோடி அதிகரிக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
2019ஆம் ஆண்டுக்கும் 2050ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலட்தில் 55 நாடுகளின் மக்கள் தொகை குறைந்தது 1 விழுக்காடாவது சுருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் 27 நாடுகளின் மக்கள் தொகை குறைந்தபட்சமாக ஒரு விழுக்காடு சுருங்கியுள்ளது. இந்நூற்றாண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 1100 கோடியாக உயரும் என்று இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை