தமிழா்களின் உாிமை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவா்கள் இன்று தமிழ்தேசியம் பேசுவது மிகவும் வேடிக்கை!!

தமிழா்களின் உாிமை போராட்டத்தையே காட்டிக் கொடுத்தவா்கள் இன்று தமிழ்தேசியம் பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினா் கே.கே.மஸ்த்தான் கூறியுள்ளாா்.


வவுனியா ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், நாங்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொகையில்

பல இடங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான பல உபகரணங்களை வழங்கி வருகின்றோம். அவை 30 இலட்சம் ரூபாவையும் தாண்டியுள்ளது.

இதற்கப்பால் 70 மில்லியன் ரூபாவில் வீதி வேலைகளும் இடம்பெற்று வருகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே நாம் இதனை செய்கின்றோம். எமக்கு கம்பெரலிய இல்லை.

எனினும் நாம் மக்களுக்கான தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்து வருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது அரசுடன் முரண்பட்டு ஆதரவை வாபஸ் பெறுகின்றதோ

அன்று இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டு கொடுத்துவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை

தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என நாம் ஞாபகமூட்டுவதை சிலர் குறையாக நினைக்கின்றனர். நாங்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்த காலத்திலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சியாகவே இருந்தது. அதனூடாக நிதியை பெற்று வேலைத்திட்டங்களை செய்தார்கள். அது பாராட்டத்தக்க விடயம்.

எனினும் இந்த தொங்கும் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி உரிமையை பெறவில்லை என்பதே எமது கவலை. எத்தனை வருடங்களாக உரிமைப்போராட்டம் நடைபெற்றது.

அது காட்டிக்கொடுப்புக்களால் தோற்கடிக்கப்பட்டது. இன்று காட்டிக்கொடுத்தவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையே இன்று உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தான் நாம் கூறுகின்றோம். அபிவிருத்திகளுடன் உரிமையையும் பெற வேண்டும். உரிமையை பெறுவதற்கான முயற்சியையும் கட்டாயமாக எடுக்க வேண்டும்.

இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. தற்போதைய நிலைமையால் இனப்பிரச்சினைக்கான தீர்வையும்,

உரிமையையும் பெற முடியாதுள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறெனில் இவ்வளவு காலமும் என்ன செய்தீர்கள் என கேட்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.