தொழிலில் மட்டுமன்றி தொழிலிடத்திலும் திறமையானவராக இருங்கள்!!

இன்று மாற்றங்களின் தொகுப்பாக திகழ்கிறது தொழில் உலகம். மாற்றங்களின் சதவிகிதமும் வீச்சும் அபரிமிதமாகவும் இருக்கிறது.
தொழில்நுட்பம், நிர்வாக உத்திகள், மார்க்கெட் நிலவரம், பொருளாதார நிலைப்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்குத் தினந்தோறும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
இந்தத் திறமை உங்களிடம் இருந்தால்... நீங்கள்தான் முதன்மையானவர்.
`ஒரு நிறுவனத்தில் ஊழியர்களாகச் சேருவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் வயது, கொள்கை, லாபவிகிதம், வளர்ச்சி, வேலைப் பாதுகாப்பு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், சம்பளம் போன்ற பலவித விஷயங்களைக் கவனத்தில்கொண்டே பணியில் சேர்கிறார்கள். ஆனால், தன் உயர் அதிகாரியிடம் நல்லுறவு இல்லாததாலும், அவருடனான கசப்புணர்வு, சக ஊழியர்களின் உறவுகளில் விரிசல் எனப் பல காரணங்களைச் சொல்லி தங்களின் ராஜினாமா கடிதத்தை கொஞ்சமும் யோசிக்காமல் சமர்ப்பிக்கிறார்கள்' என்கிறது ஹே கன்சல்டன்ட்ஸ் (Hay consultants) என்கிற பிரசித்திபெற்ற பன்னாட்டுத் தொழில் ஆலோசனை நிறுவனத்தின் ஆராய்ச்சி.

இப்படித்தான் இன்று நம்மில் பெரும்பாலானோரின் நிலையும். சக ஊழியர்களிடம் சண்டை, உயர் அதிகாரிகளுடன் மனக்கசப்பு போன்ற உணர்வுரீதியான பிரச்னைகளுக்காக வேலையை விட்டுக்கொண்டிருக்கிறோம். மனித மனம், அன்பு, ஆனந்தம், கருணை, நிம்மதி, திருப்தி, ஆர்வம் போன்ற பாசிட்டிவ் உணர்ச்சிகளையும்... கோபம், பொறாமை, துயரம், பழிவாங்குதல், பயம் போன்ற நெகட்டிவ் உணர்ச்சிகளையும் உள்ளடக்கியது. இத்தகைய உணர்ச்சிகளை அடையாளம் கண்டு சுயக்கட்டுப்பாட்டோடும் திறமையோடும் அவற்றைக் கையாள்வதில்தான் மனித உறவின் வெற்றி ரகசியம் இருக்கிறது. தன் உணர்ச்சிகளை மட்டுமன்றி, தன் பணியிடத்திலும் அதற்கு அப்பாலும், அன்றாடம் பழகும் மனிதர்களிடமும் அவ்வப்போது மாறுபடும் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை சரியான முறையில் கையாளவேண்டியது அவசியம்.

இன்று மாற்றங்களின் தொகுப்பாகத் திகழ்கிறது தொழில் உலகம். மாற்றங்களின் சதவிகிதமும், வீச்சும் அபரிமிதமாக இருக்கின்றன. தொழில்நுட்பம், நிர்வாக உத்திகள், மார்க்கெட் நிலவரம், பொருளாதார நிலைப்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு தினம்தோறும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. இது மாதிரியான சூழ்நிலைகளில், வேலை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை மட்டும் சரிவர புரிந்துகொண்டால் மட்டும் போதாது, பணியிடத்தில் தன்னோடு வேலைசெய்யும் ஒவ்வொரு மனிதரின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கு உணர்ந்து அவர்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே வெற்றிகரமான ஊழியராக தன்னை ஒருவர் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
 பணியிடத்தில் பிறரோடு பேசுவதற்கும் உறவாடுவதற்கும் நாம் பெரும்நேரத்தை எடுத்துக்கொள்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால், சக ஊழியர்களுடனான பேச்சும் உறவும் அர்த்தமற்றதாக மாறும்போது பெரும்பாலான நிறுவனங்கள் எச்சரிக்கத்தான் செய்யும். எவர் ஒருவர் சக ஊழியர்களோடு சுமுகமான பழக்கமும் ஆரோக்கியமான உரையாடல்களையும் மேற்கொள்கிறாரோ, அவருடைய வெற்றி அப்போதே உறுதியாகிறது. இதைத்தான் `எமோஷனல் இன்டெலிஜென்ஸ்' (Emotional intelligence) என்பார்கள். (`வேலைக்குச் சேர்ந்ததும் மேனேஜரை காக்காபிடிச்சுட்டான்டா' என்பார்களே, இது நிச்சயமாக அது கிடையாது).

அன்றாடம் ஊழியர்களிடையே சிந்தனைப் பரிமாற்றம் நடக்கும். அதே சமயத்தில், தன் உணர்ச்சிகளையும் பிறரது உணர்ச்சிகளையும் தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை சரிவர கையாள்வதும் மிக முக்கியம். சில பணியாளர்கள் சக ஊழியர்களைப் பாராட்டுவதற்குக்கூட தயங்குவார்கள். பாராட்டு என்பது, மனிதனின் மிக ஆழமான தேவை. ஒரே ஒரு நல்ல சொல்லைப் பயன்படுத்தி அந்தத் தேவையை நாம் பூர்த்திசெய்யலாம்.

உறவுகள் பலப்படுவதற்கு அதுவே மிகச்சிறந்த உரமாக அமையும். தெரிவிக்காத சிந்தனைகளுக்கும் வெளிப்படுத்தாத உணர்ச்சிகளுக்கும் எப்போதுமே மதிப்பு கிடையாது. மாறாக, அந்த நிலை மனித உறவில் விரிசல்களை ஏற்படுத்திவிடும். வேலையில் கவனம் சிதறுவதற்கும் செயல்திறன் குறைவதற்கும் அதுவே காரணமாக அமைந்துவிடும். குழு உணர்வும், குழுவின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

பிறரோடு கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவருடைய உணர்ச்சியும் உறவும் பாதிக்காத வகையில் திறமையோடு கையாளவேண்டியது அவசியம். தொழில் உலகில் மட்டுமல்ல, மற்ற எந்தத் துறையிலும் உச்சத்தை எட்டிப் பிடித்தவர்களின் திறமைகளைப் பட்டியலிட்டால், எமோஷனல் இன்டெலிஜென்ஸ்தான் முதல் இடத்தைப் பிடிக்கும். காரணம், அவர்கள் உயரத்தை எட்டுவதற்கு பெரும்உதவியாக இருந்தது அந்தத் திறமை மட்டுமே. குறிப்பாக, தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளுக்கு இந்தத் திறமை மிகவும் முக்கியமானது.

அவருக்கு அனைத்துத் தொழில்நுட்பங்களும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அதேசமயத்தில், அனைத்து ஊழியர்களையும் அலுவலர்களையும் அரவணைத்து ஊக்கப்படுத்தி ஒரு குழு உணர்வை நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் வளர்க்க எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.
 பணியிடத்தில் நீங்கள் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் பணியாற்றுகிறீர்களா என்பதை அறிய, உங்கள் மேலதிகாரி உங்களை ஒரு மனிதராக மரியாதையாக நடத்துகிறாரா? உங்களின் கருத்துகள் அவரால் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? கடந்த ஆறு மாதத்தில் உங்களின் வளர்ச்சியைப் பற்றி யாராவது நிறுவனத்தில் உங்களிடம் பேசினார்களா? உங்களின் திறமையான செயல்பாட்டை, கடந்த ஒரு வாரத்தில் யாராவது பாராட்டினார்களா? போன்ற சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு சுயபரிசோதனை செய்துகொள்வது முக்கியம். இதன் மூலம் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் திருத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொண்டு, முன்பைவிட வேகமாக முன்னேறுங்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில், கேட்ஜெட்கள், டிவைஸ் என்றில்லாமல் மனிதத் தொடர்புகள்தான் நமது ஒட்டுமொத்த சொத்து என்பதைப் புரிந்து செயல்படுங்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், நம் கண்களால் நேரடியாக ஒருமுறைகூட பார்க்காத நிழல் மனிதர்களிடம் நேரத்தையும் ஆர்வத்தையும் செலவிடுவதைவிட, உங்களுடைய பணியிடத்திலும் அதற்கு வெளியிலும் நீங்கள் உறவாடும் நிஜ மனிதர்களிடம் செலவிடுங்கள். இந்தச் செலவு, நிச்சயமாக உங்களின் வளர்ச்சிக்கு ஒரு முதலீடாக மாறும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.