இன்று தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29 ஆவது சிரார்த்த தினமான தியாகிகள் தினம் இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.


அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு சிறிதரன் பத்மநாபா மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரேகன் தலைமையில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது,

இந்நிகழ்வில் அக்கட்சியின் உறுப்பினர்கள் பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, நகரசபை உறுப்பினர்கள், ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு தீபமேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.