உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மர்லின் மன்றோ சிலை களவு!
மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் உலோகச் சிலை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திருடப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டுகளில், ஹாலிவுட் பட உலகில் கொடிக்கட்டி பறந்தவர் மர்லின் மன்றோ. இவர் தனது 36ஆவது வயதில், எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவியிருந்தார்.
இந்நிலையில் மர்லின் மன்றோ இறந்த பின்னரும், அவரது படங்கள் வசூலை வாரி குவித்தன.
1955ஆம் ஆண்டு வெளியான தி செவன் இயர் இட்ச் (( "The Seven Year Itch")) படத்தில் இடம்பெற்ற காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்றளவும், மர்லின் மன்றோவின் அடையாளமாக திகழ்கிறது.
தனது ஆடை பறக்காமல் மர்லின் மன்றோ பிடித்திருக்கும் புகைப்படத்தை தழுவி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், உலோகச் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
நான்கு ஹாலிவுட் நடிகைகள் தலையில் தாங்கியிருக்கும் கோபுர வடிவிலான கூரை அமைப்பின் மீது உள்ளவாறு, 1994ஆம் ஆண்டு, மர்லின் மன்றோ சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க நேரப்படி, திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த சிலை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை எட்டாத உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த, மர்லின் மன்றோவின் உலோகச் சிலையை, ஒருவர் ஆக்சா பிளேடால் அறுத்து எடுத்துச் சென்றிருப்பதாக, லாஸ் ஏஞ்சலீஸ் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை