வைத்தியசாலைகளில் விசாரணைகளை மேற்கொள்ள CID தீர்மானம்!!
சர்ச்சைகளில் சிக்கியுள்ள வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக தாய்மார்கள் வழங்கியுள்ள முறைப்பாடுகள் குறித்து காசல் மற்றும் சொய்சா வைத்தியசாலைகளில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய குறித்த விசாரணைகளுக்கான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு குருணாகல் சட்ட வைத்திய சுகாதார செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனோடு சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் மேற்கொண்டமை குறித்தும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை