வவுனியாவில் தேங்காய் உடைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும் பொது அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கவுள்ளன.
அதற்கமைய வவுனியா கந்தசாமி கோயிலில் நாளை காலை 7.30 மணிக்க 108 தேங்காய்கள் உடைக்கப்படவுள்ளன.
இந்த தேங்காய உடைக்கும் போராட்டத்தில் சமூக ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மற்றும் கல்முனையில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டதிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
அத்தோடு நேற்று 1000 மெழுகுவர்த்திகளை ஏற்றி கல்முனை மக்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை