இலங்கையிலிருந்து பணிப்பெண்களாகச் சென்றவர்களைத் திருப்பி அனுப்பியது குவைத்!!

குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


54 பெண்கள் இன்று அதிகாலை இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களில் 37 பேர், குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்குரிய பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.