மலேசியாவிலும் ஐ.எஸ் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை!!

மலேசியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


South China Morning Post என்ற ஊடகத்திற்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே மலேசிய உயர் பொலிஸ் அதிகாரியான Abdul Hamid Bador இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையினைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் 20 இற்கும் மேற்பட்ட மலேசியாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள் தகவல்களைப் பரிமாற முயற்சி செய்யக்கூடும். 2013ஆம் ஆண்டிலிருந்து 100 இற்கும் அதிகமான மலேசியர்கள் சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் ஐ.எஸ் அமைப்பில் இணையச் சென்றுள்ளனர்.

இவ்வாறு இணைந்து கொண்டவர்களில் 40 பேர் யுத்தத்தின் போதும், 09 பேர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் போதும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஆறாண்டுகளில் 20 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதச் சதித்திட்டங்களை மலேசிய பொலிஸ் அதிகாரிகள் முறியடித்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.