குவைத் மற்றும் பாகிஸ்தானில் அதிக வெப்ப நிலை!!

கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவில் குவைத் மற்றும் பாகிஸ்தானில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.


உலக வானிலை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிகபட்ச வெப்பநிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1913ஆம் ஆண்டு 134 டிகிரி பாரன்ஹீட் (56.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

இரண்டாவதாக துனிசியாவின் கெப்லி நகரில், 1931 ஜூலை 7இல் 131 டிகிரி பாரன்ஹீட் (55 செல்சியஸ்) பதிவானது.

மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை, 2016 ஜூலை 21ல் குவைத்தின் மித்ரிபாஹ் பகுதியில் 129 டிகிரி பாரன்ஹீட் (53.9 டிகிரி செல்சியஸ்) என பதிவானது.

நான்காவது அதிகபட்ச வெப்பநிலை பாகிஸ்தானின் துர்பத் பகுதியில் 2017 மே 28ல் 128.7 டிகிரி பாரன்ஹீட் (53.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

இந்தநிலையில் நீண்ட ஆய்வுக்கு பின் பாகிஸ்தான், குவைத்தில் பதிவான அதிக வெப்பநிலையை உலக வானிலை மையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.