எம்மைப்பிடித்த பிணி.!!

தமிழ்த்தேசியப்பாதையில்
தனிமனித அதிகாரங்கள் தொடருமானால்
இனியொரு விதிசெய்வோம்!

தலையில் ஏறி தலப்பா கட்டும்
நிலையில் தமிழன் இல்லையெனும்
தலைவிதியை மாற்றுவோம்!

கொடிய யுத்தம் கொழுத்திப்போட்ட
கொடிய வலியும் வதைகளும்
பத்து வருடங்களாக படுத்திய பாட்டில்
மெல்ல மெல்ல துளிர் விட்டு
விடுதலையின் குரல்கள் முழங்க தொடங்கிய நிலையில்
தேசிய ஆன்மாவில் தேடிக்
குத்தும்
தீராத நோயின் தாக்கம்
விட்டபாடில்லை!

வேண்டாம்!

கொடியநோயின் தாக்கம்
கொஞ்சமும் நின்மதியாக
தூங்கவிடாது!
குணப்படுத்தக்கூடியவர்
நல்ல வைத்தியரை நாடி
நல்ல மருத்துவத்தை தேடி
மாற்றுவதே
சிறந்தது!

இல்லை!
இப்படித்தான்
என்றால்

தொற்று வியாதியின்
அடர்த்தி கனதியாகி
மரணம்வரை வந்துவிடும்!

கவனம்!

தலைக்கு வந்தது தலப்பாவோடு
போகட்டும் என்பதைத்தான்
மனிதர்கள் விரும்புவார்கள்!
யாரும் தலைபோக விரும்பமாட்டார்கள்!

ஓட்டுக்கேட்கும் அரசியல் வாதிகள்போல்
இரட்டை நாக்கோடு அலைவது
நல்ல தலைவனுக்கு அழகில்லை!

தனிமனித விருப்புகளுக்கு அப்பாற்பட்டது
புனிதமான விடுதலைக்கான பணி!
இதை உணராது போனால்
இனி எம்மில் படரும் பிணி!
இதைத் தடுக்கவேண்டுமானால்
இப்போதே தணி!

✍தூயவன்

No comments

Powered by Blogger.