குழுமோதலில் இருவர் காயம்!!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 20.06.19 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைவேலியினை சேர்ந்த இளைஞர்களுக்கும் கோம்பாவில் பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்ள மோதலாக மாறியுள்ளது இதன்போது கைவேலிப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் கோம்பாவில் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வாளால் வெட்டியுள்ளார்கள் இதன்போது
04 ஆம் வட்டாராம் கோம்பாவில் பகுதியினை சேர்ந்த 19 அகவையுடைய சர்மிலன் என்ற இளைஞனும், கோம்பாவில் பகுதியினை சேர்ந்த 22 அகவையுடைய லக்கீரன் என்ற இளைஞன் காயமடைந்து மாவட்ட மருத்துவ மனைகொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா லக்கீரன் என்ற இளைஞன் யாழ்பொது மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட் இளைஞர்களின் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.