திருகோணமலையில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி புடவைக்கட்டு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் இருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் புடவைகட்டு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் குச்சவெளி செந்தூர்-மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த கே.சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆர்.நிரோசன் (28 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களும் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.