உலகைக் காப்பாற்ற இந்தியபிரதமரை வலியுறுத்திய மணிப்பூர் சிறுமி!!

PC: Timesnownews
லிசிப்ரியா கங்குஜம் (Licypriya Kangujam), 7 வயதான இந்த மணிப்பூர் மாணவி, சில தினங்களுக்கு முன்னால் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு பதாகையுடன் நின்றிருந்தாள்.
அதில், `டியர் மிஸ்டர். மோடி அண்ட் எம்.பி-க்களே' என்று விளித்து, `காலநிலை மாற்றத்துக்கான சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள். நம் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது.

`கடலின் மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. பூமி சூடாகிக்கொண்டே போகிறது. பருவ நிலை மாற்றத்திலிருந்து இந்தியாவின் வருங்காலத் தலைமுறையைக் காப்பாற்ற உடனே செயல்படுங்கள்' என தன் கோரிக்கையை நாடாளுமன்றத்தின் வாசலில் நின்று அழுத்தந்திருத்தமாகப் பதிவுசெய்துள்ள இந்த இரண்டாம் வகுப்புச் சிறுமி, சென்ற வருடம் மங்கோலியாவின் தலைநகரத்தில் நடந்த ஏஷியன் மினிஸ்ட்ரியல் கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டு இயற்கைப் பேரழிவின் ஆபத்துகளைக் குறைப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். 

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் சபையிலும் இதே தலைப்பில் உரையாற்றியிருக்கிறார். இந்தத் தலைப்பில் பேசுவதற்காக, ஐக்கிய நாடுகளின் சபை அழைத்திருந்த மிக இளவயது பங்கேற்பாளர் லிசிப்ரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டபோதுகூட, ``பூகம்பங்களாலும், வெள்ளங்களினாலும், சுனாமிகளினாலும் மக்கள் அழிவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும்போது, குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழக்கும்போதும் நான் அழுகிறேன். எல்லோரும் ஒன்று கூடுங்கள். நம் உலகத்தைக் காப்பாற்ற நாம் ஒன்று கூடுவோம்'' என்றுதான் உரையாற்றியிருக்கிறார் லிசிப்ரியா.

வரும் தலைமுறைகளுக்குப் பாதுகாப்பான உலகைக் கொடுக்க, நாமும் உறுதியெடுப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.