ஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் சாம்பியன்!!

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 10 -ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெர்மனியில் இன்று நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் ஆகியோர் மோதினர். இதில், காபினை 6-7, 1-6 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரர் வீழ்த்தி, தொடரை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் 10 -ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.