கிளிநொச்சி நோக்கி பயணமானது விழிப்புணர்வு வாகனப் பேரணி!

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது.


யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணியளவில் இந்த பேரணி ஆரம்பமாகியது. இந்தப் பேரணியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இம்மாதம் 23ஆம் திகதி முதல் ஜு மாதம் 01ஆம் திகதி வரை போதை ஒழிப்பு வாரமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், போதை ஒழிப்பு வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திணைக்களங்கள் மற்றும் செயலகங்கள் ஊடாக வெவ்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதற்கமைய வடக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க வட. மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வாகனப் பேரணியை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையிலேயே யாழிலிருந்து இந்த பேரணி கிளிநொச்சி நோக்கி செல்கிறது. இந்த போதை ஒழிப்பிற்கு அனைத்து தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்கி போதைப்பொருளை இல்லாதொழிக்க ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.