திராவிட சாரய ஆலை முதலாளிகளின் தண்ணீர் பந்தலான டாஸ்மாக் வழங்கிய பரிசு!

மருத்துவர் ரமேஷ் மனைவியின் உடலுடன் விபத்து நடந்த இடத்திலிந்து போராட்டம். மகள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

//“கோவை மருத்துவர் ரமேஷ் அவர்களின் மனைவி விபத்தில் மரணம்....
இயற்கையின் மீதான அளவுகடந்த காதலன் மருத்துவர் ரமேஷ்... ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஆழமாக செயலாற்றி வருபவர்... நேற்றைய நாளையும் தன் மனைவி இறந்த நிலையிலும் சமூக பங்களிப்போடு கடந்தார்... மனைவி தன்னுடைய மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது ஆனைகட்டி மலைப்பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்புக்கும் இடையே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் அருகில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களால் பலமாக மோதி மருத்துவர் ரமேஷ் அவகளின் மனைவி மரணமடைந்தார்... மகள் கடுமையான விபத்தின் காரணமாக கால் எலுப்புகள் கை, முகம் என கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்... ஆனால் மருத்துவரோ மகளை சமூகம் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டு விட்டு மனைவியியின் உடலோடு அப்பகுதி மக்களோடு டாஸ்மாக் கடையை அகற்ற சாலையில் இரவு வரை போராட்டம் நடத்தினார்... டாஸ்மாக் கடை நீக்கப்படும் என்ற உறுதிக்கு பின்பே மனைவியின் உடலை அரசு மருத்துவமணைக்கு எடுத்துச்சென்று... காலை 3 30 மணிக்கு தன் மகளை மருத்துவமணையில் காண கதரலோடு பயணப்பட்டார்.. எந்த ஒரு போராட்டமென்றாலும் கணவனோடு கை கோர்த்த அவரது மனைவி... இன்று அவரது உடலையே சமூகத்திற்கான ஆயுதமாக மாற்றினார்...சமூகத்தின் மீதான அளவு கடந்த உங்கள் அன்பை இந்த சமூகம் மறவாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.