இலங்கைக்கான பயணத்தடையை விலக்கியது அமெரிக்கா!!

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது.


இலங்கை மீதான பயணத்தடை நேற்று நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த மூன்றாம் நிலை (Level 3) பயண எச்சரிக்கை ஆலோசனையை தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 24 ஆம் திகதி பயண எச்சரிக்கையை புதுப்பித்த அமெரிக்கா, இலங்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12 ஆம் தர மாணவர்கள் வரையானவர்களை, நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தியிருந்தது.

பயங்கரவாதிகள் இலங்கையில் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளமையினால் குறிப்பாக சுற்றுலா பிரதேசங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், அங்காடிகள், அரசாங்க ஸ்தாபனங்கள், விருந்தகங்கள், விடுதிகள், உணவகங்கள், மதஸ்தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், கல்வி நிறுவகங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா தங்களது பிரஜைகளை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.