தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் 380 தொண்டர் ஆசிரியர்களுக்கும் 1119 தொண்டர் ஆசிரியர்களுக்கும் இந் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சிதார்த்தன், எம். ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மகரூப், எம். எஸ். தௌபீக், மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞான ஜோதி மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை