மரணதண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டதற்கு எதிராக போராட்ட அழைப்பு!!

ஜனாதிபதி சிறிசேன பெயரிடப்படாத நான்கு நபர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டதற்கு எதிராக குடிமக்களாக நாம் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.


திகதி: 2019 ஜூன் 28 வெள்ளிக்கிழமை
இடம்: வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில்
நேரம்: மாலை 4.00 மணி

நான்கு தசாப்தங்களாக நடைமுறையில் இல்லாதிருந்து ஜனாதிபதியின் இந்த முடிவால் மீண்டும் கொண்டுவரப்படும் மரண தண்டனை அரச படுகொலை இடம்பெறும் ஒரு இருண்ட சகாப்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற முறையில், பாலியல் வன்புணர்வு, கொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களை ஒரு சிலரை பலிக்கடாவாக்கி தூக்கில் தொங்கவிடப்படுவதன் மூலம் நிறுத்திவிட முடியாது என்பதை நாங்கள் அறிவோம். மனித விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பப்படுகின்ற சமூகத்தில் மரண தண்டனைக்கு இடமில்லை என நீங்களும் நம்பினால் ஒன்று சேருங்கள்.

No comments

Powered by Blogger.