சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கிளிநொச்சி மாணவர்கள்!!

போருக்குள் பிறந்து போருக்குள் வாழ்ந்து மீள் குடியேற்ற காலத்தில் கல்வி கற்கத் தொடங்கி தமது அயராத முயற்சியாலும், திறமையாலும் கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய நிலையில் வெற்றி பெற்று சர்வதேச ரீதியில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய தரம் 8 மாணவர்களான செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் செல்வன் ஆனந்த் கிருஷோந் ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர்.


இவர்களில் செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன் கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கு கொண்டவர்.

இந்நிலையில் குறித்த இரு மாணவர்களின் திறமைகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இம் மாணவர்கள் தென்னாபிரிக்கா சென்றுவருவதற்கான விமான பயண சீட்டுக்கான கட்டணம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் புலமை பரிசிலாக வழங்கப்பட்டுள்ளது.

தமது ஆற்றலாலும்,முயற்சியாலும் தமது பாடசாலைக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் இவர்களின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோர்கள்,ஆசிரியர்கள் அதிபர்,மற்றும் வளவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.