ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்!!

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றினை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்துள்ளனர்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான குழுவினருடன் முற்போக்கு கூட்டணியொன்றை அமைக்கவும் அக்கூட்டணிக்கு தலைமை வகிக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (06) நண்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பளாப்பிட்டிய, லசந்த அழகியவண்ண, வீரகுமார திசாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜேவிக்ரம, மொஹான் லால் கிரேரு, சாந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

Powered by Blogger.